பேத்தியை துஸ்பிரயோகம் செய்த பாட்டனார்.
தனது மகனின் 7 வயதான மகளை (பேரப்பிள்ளை) பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 73 வயதான நபரொருவரை எதிர்வரும் 31 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி பிரதம நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
சநதேகநபர் நேற்று(21) நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை வெளிநாட்டில் பணிபுரிந்துவருவதால், தாம் மற்றைய சகோதர்கள் மற்றும் பாட்டனார் ஆகியோருடன் இச்சிறுமி வசித்து வந்துள்ளார்.
இவ்வாறு வசித்துவந்த வேளையில், தாய் தனது மூத்த மகனை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். எனினும், வைத்தியர் இல்லாதிருந்ததால் அவர்கள் விரைவில் வீடு திரும்பியுள்ளனர்.
அதன்போது, சந்தேகநபரான பாட்டனார் சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்டுபடுத்துவதை கண்ட தாய், சத்தமிட்டுள்ளார். இதனையடுத்து அவ்விடத்துக்கு வந்த அயலவர்கள் சந்தேகநபரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சிறுமியிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ள அதேவேளை, சிறுமியை கராப்பிட்டிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தி அறிக்கை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Post a Comment