தேங்காய் எண்ணெய் தட்டுப்பாடு நிலவக் கூடும் என தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை.
பண்டிகை காலத்தில் நாட்டினுள் தேங்காய் எண்ணெய் தட்டுப்பாடு நிலவக் கூடும் என தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாளாந்தம் இலங்கையில் நுகர்வுக்காக 300- 350 மெட்ரிக் டன் தேங்காய் எண்ணெய் தேவைப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.இருப்பினும், சமீபத்தில் இறக்குமதி செய்யப்பட்ட 13 தேங்காய் எண்ணெய் கொள்கலன்களில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய இரசாயனம் அடங்கி இருப்பது தெரியவந்ததையடுத்து சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவினால் அவை மீண்டும் ஏற்றுமதி செய்ய பரிந்துரைக்கப்பட்டது.
அத்துடன், தேங்காய் எண்ணெய்யை சந்தைக்கு விநியோகம் செய்யாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, தேங்காய் எண்ணெய்யை இறக்குமதி செய்த மூன்று நிறுவனங்களுக்கு சீல் வைக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த சூழ்நிலை காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்யை சந்தைக்கு விநியோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
Post a Comment