Header Ads

test

தாலி கட்டும் நேரம் மணப்பெண் மாயம் அதிர்ச்சியில் மணமகன்.

 சென்னை செம்பரம்பாக்கம் பகுதியில் வசித்து வந்த ஒருவருக்கும், மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது.

திருமணத்திற்கு முன்பாக நசரத்பேட்டை திருமண மண்டபம் ஒன்றில் வரவேற்பு நிகழ்ச்சியும் தொடர்ந்து மறுநாள் காலை திருமணமும் நடைபெற இருந்துள்ளது.

இதனால், மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினர் இரவே திருமண மண்டபத்திற்கு வந்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, நண்பர்கள் உறவினர்கள் என அனைவரும் வரத் துவங்கினர். ஆனால், மணப்பெண் மட்டும் மண்டபத்திற்கு வரவில்லை.

அவர் பியூட்டி பார்லருக்கு சென்று இருப்பதாக தெரிவித்தனர். எப்படியும் வந்து விடுவார் என்று மாப்பிள்ளை வெகுநேரமாக காத்திருந்தார்.

ஆனால், நீண்ட நேரமாகியும் வரவில்லை. தொடர்ந்து, பெண் வீட்டினர் மணப்பெண் மாயமாகி விட்டதாக கூறியுள்ளனர். இதனால், மாப்பிள்ளை வீட்டினர் ஆத்திரத்தில் திருமண மண்டபத்திற்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த வாழ்த்து பதாகைகளை கிழித்து எறிந்தனர்.

மேலும், நசரத்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்ற மணமகன் வீட்டினர் திருமணம் நின்று போன காரணத்தால் மணப்பெண் பெற்றோர்கள் மீது தங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என புகார் அளித்துள்ளனர். இதனால், காவல் துறையினர்கள் அதிர்ச்சியடைந்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.



No comments