உறங்கிக் கொண்டிருந்த கணவனை கொலை செய்த மனைவி.
தங்கொட்டுவ- கொஸ்வத்தை பிரதேசத்தில் உறங்கிக் கொண்டிருந்த கணவனை கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவம் நேற்று (27) இரவு இடம்பெற்றுள்ளதாக கொஸ்வத்தை காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.இவ்வாறு உயிரிழந்த நபர் ரஜவத்தை - கிரிமெட்டியான பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடையவராவார்.
கொலை செய்யபட்ட நபருக்கும் அவரது மனைவிக்கும் இடையில் குடும்ப பிரச்சினை நிலவி வந்ததாக விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.
அவர்களின் குடும்ப தகராறு தொடர்பில் 30க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கொஸ்வத்தை காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இந்த கொலை தொடர்பான நீதிவான் விசாரணை நடைபெற உள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment