Header Ads

test

காங்கேசன்துறை கடற்பரப்பில் திரவப் படலம் - யாழ். மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

 காங்கேசன்துறை கடற்பரப்பில் திரவப் படலம் தென்படுவதாக யாழ். மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த திரவப் படலத்தின் மாதிரிகள் யாழ்ப்பாண மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவால் இன்று மாலை எடுக்கப்பட்டது.

மாதிரிகள் தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துக்கு (NARA) அனுப்பிவைக்கப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரவப் படுக்கை தொடர்பில் ஆய்வு செய்த பின்னரே அதுதொடர்பில் ஒரு முடிவுக்கு வரமுடியும் என்று இடர் முகாமைத்துவப் பிரிவின் யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பணிப்பாளர் சூரியகுமார் தெரிவித்தார்.


No comments