என்னிடம் வாக்குமூலத்தை பெறுவதற்கு காவல்துறைக்கு எந்த அதிகாரமும் கிடையாது என சுமந்திரன் தெரிவிப்பு.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணியில் பங்கேற்றமை தொடர்பில், களுவாஞ்சிக்குடி காவல்துறையினர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமது பேஸ்புக் தளத்தில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தமக்கு எதிராக எந்தவொரு முறைப்பாடும் இல்லாத பின்னணியிலும், எந்த நீதிமன்ற உத்தரவொன்றும் அதில் தான் கலந்து கொள்வதை தடுத்திராத பின்னணியிலும், தமது வாக்குமூலத்தை பெறுவதற்கு காவல்துறைக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்பதை தாம் பதிவுசெய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், அவர்களின் விசாரணைக்கு உதவியாக வேண்டுமானால் வாக்குமூலம் தரலாம் என்றுகூறி, வாக்குமூலம் வழங்கியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணியில் பங்கேற்றமை தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடன் இதற்கு முன்னரும் காவல்துறையினர் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், மனோ கணேசன், சிவஞானம் சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தவராசா கலையரசன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிடோரிடமும் காவல்துறையினர் வாக்குமூலம் பதிவுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment