வியாழக்கிழமை வரும் பிரதோஷ விரதமும்... கிடைக்கும் பலன்களும்...
ஒவ்வொரு கிழமைகளில் வரும் பிரதோஷத்திற்கும், சில குறிப்பிட்ட பிரச்சினைகளை தீர்க்கும் சக்தி உண்டு. வியாழக்கிழமை வரும் பிரதோஷ அன்று விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.
குரு கடாட்சம் மிளிரும் நாள், வியாழக்கிழமை. அன்றைய தினம் வரும் பிரதோஷத்தில் வழிபாடு செய்யும் தனுசு, மீனம் ராசி மற்றும் லக்னத்தை சேர்ந்தவர்களும், குரு தசை - புத்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதக ரீதியான தோஷம் நீங்கும்.
பிரம்மஹத்தி தோஷம், குரு சாபம் அகலும். குரு நீச்சம், குரு அஸ்தமனம் பெற்றவர்களுக்கு கெடுபலன் குறையும். தர்ம கர்மாதிபதி யோக பலன் முழுமையாக கிடைக்கும். கோவில் தர்மகர்த்தா, நீதிபதிகள் பதவியில் இருந்த பிரச்சினை தீரும்.
குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியம் சீராகும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறும். மூளை, கல்லீரல், மஞ்சள் காமாலை நோய் நீங்கும்.
அடமானத்தில் இருக்கும் நகையை மீட்பீர்கள். ஆபரண சேர்க்கை ஏற்படும். வராக்கடன் வசூலாகும். மேலும் பலனை அதிகரிக்க, லட்டு தானம் செய்ய வேண்டும்.
Post a Comment