Header Ads

test

கிளிநொச்சி ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழப்பு.

 கிளிநொச்சி ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ9 வீதியின் பரந்தன் சந்தியை அண்மித்த விவசாயப் பண்ணைக்கு முன்பாகவே இந்த விபத்து சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பொலிஸ் உத்தியோகத்தர் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியில் நின்ற மாட்டுடன் மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரான வடமராட்சியை சேர்ந்த மேரிஜாக்சன் அன்ரனி வயது 30 என்பவரே உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



No comments