பெட்ரோல் வாசனையை நுகர்ந்த 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு.
தம்புள்ளை - வெலமிடியாவ பகுதியில் மோட்டார் சைக்கிளின் எரிபொருள் தொட்டியில் இருந்து மூடியை அகற்றி பெட்ரோல் வாசனை செய்யச் சென்ற 7 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று மதியம் நடந்துள்ளது.
இதில் தம்புள்ளை - வெலமிடியாவ ஆரம்பப்பள்ளியில் தரம் இரண்டில் கல்வி பயிலும் சஜித் குமார முனசிங்க என்ற 7 வயதுச் சிறுவனே உயிரிழந்துள்ளார்.
உறவினர்களின் கூற்றுப்படி, குழந்தை நேற்று மதியம் தனது பாட்டி வீட்டிற்கு வந்து, வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி, மூடியை அகற்றி, பெட்றோல் வாசனையை முகர்ந்து பார்த்துள்ளார்.
இதன்போது மயக்க நிலையில் இருந்த குறித்த சிறுவனை கலேவெல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிறுவனின் சடலத்திற்கு இன்று பிரேதபரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment