Header Ads

test

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருந்த 60 லட்சம் பெறுமதியான மஞ்சளை பாரவூர்தி ஒன்றில் ஏற்றிச் சென்றவர் கைது.

 இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருந்த 60 லட்சம் பெறுமதியான மஞ்சள் தொகையினை பாரவூர்தி ஒன்றில் ஏற்றிச் சென்ற ஒருவர் நீர்கொழும்பு நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மன்னார் பகுதியை சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட மஞ்சள் தொகை நீர்கொழும்பு – குட்டிதுவ கடற்கரையில் அண்மையில் கைப்பற்றப்பட்டிருந்த மஞ்சளின் எஞ்சிய தொகையாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


No comments