இலங்கையின் தலை நகரில் தொடர்ந்தும் பரபரப்பு- 6 பெண்களை காணவில்லை.
கொழும்பு - டாம் வீதியில் சந்தேகநபர் தொடர்பில் தகவல் தெரிவிப்பதற்காக பொது மக்களுக்கு வழங்கப்பட்ட அவசர தொலைபேசி அழைப்பிற்கு சுமார் 40 அழைப்புகள் வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் 6 அழைப்புக்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
குறிப்பிட்ட 6 அழைப்புகளும் பெண்கள் காணாமல் போனமை தொடர்பில் தமக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த வகையில் மேலும் 6 பெண்கள் காணாமல் போயிருப்பது இதன்மூலம் தெரியவந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
தலையில்லாத பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் காணாமல் போன 6 பெண்கள் தொடர்பில் தகவல் வெளிவந்துள்ளது.
இதையடுத்து காணாமல் போன 6 பெண்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Post a Comment