Header Ads

test

நாட்டில் நேற்றைய தினம் 5,284 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

 நாட்டில் நேற்றைய தினம் 5,284 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் திகதி முதல் இதுவரையில் 7 இலட்சத்து 29 ஆயிரத்து 562 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.


இதற்கிடையில் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் யுனிசெப் நிறுவனத்தின் ஊடாக நாட்டுக்கு வழங்கப்பட்ட முதலாவது கொவிட்19 தடுப்பூசி தொகை, அதிக அவதானமிக்க வலயங்களில் வாழும் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு இன்று முதல் செலுத்தப்படவுள்ளன.

சுகாதார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான குளிரூட்டப்பட்ட வசதிகளுடன் கொண்ட விசேட விமானம் ஊடாக 2 லட்சத்து 64 ஆயிரம் கொவிட்-19 தடுப்பூசிகள் இவ்வாறு நாட்டுக்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


No comments