மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளது.
மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கத்தின் தகவல்களின்படி, 510 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், உண்மையான எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரிக்கக்கூடும் என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மியன்மார் முழுவதும் நிராயுதபாணிகளான ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்கள் மீது, கண்ணீர்ப்புகை, இறப்பர் குண்டுகள் மற்றும் செயல்நிலையில் உள்ள குண்டுகள் என்பனவற்றினால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக, இராணுவ ஆட்சியாளர்களினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைக்கு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டு வருகின்றனர்.
Post a Comment