காகிதங்கள் இறக்குமதி செய்வதாகக் கூறி சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 50 இலட்சம் ரூபா பெறுமதியான வாசனைத் திரவியங்கள்.
காகிதங்கள் இறக்குமதி செய்வதாகக் கூறி சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 50 இலட்சம் ரூபா பெறுமதியான வாசனைத் திரவியங்களைக் கொண்ட கொள்கலன் ஒன்று சுங்கத் திணைக்களத்தினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பாணந்துறை பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் ஒன்றினால் இவ்வாசனைத் திரவியங்கள் தனது தொழிற்சாலை உற்பத்திக்கு மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படும் காகிதத்தை இறக்குமதி செய்வதாகக் கூறி கடந்த 12ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
குறித்த கொள்கலன் தொடர்பில் சந்தேகம் கொண்ட சுங்க அதிகாரிகள் அதனை சோதனையிட்ட வேளையில் மிக சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாசனைத் திரவியங்களை கண்டு பிடித்துள்ளனர்.
அரசாங்கம் வழங்கிய வரி சலுகையை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் இவ்வாசனைத் திரவியங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்தின் முதற்கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
இவ்வாறான வாசனைத் திரவியங்களை இறக்குமதி செய்வதற்கு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில்
முறையாக அனுமதி பெற்றிருக்க வேண்டுமென சுங்க அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் குறித்த தொழிற்சாலை அதிகாரிகளுடன் மேலும் சிலர் சுங்கத் திணைக்களத்திற்கு வரவழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Post a Comment