Header Ads

test

நாடு பூராக 4600 அதிபர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

 நாடு பூராக 4600 அதிபர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

நாடு பூராகவும் 4600 அதிபர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. சரியான நடைமுறையில் இந்த வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

பாடசாலைகளுக்குள் இடம்பெறுகின்ற ஏற்றத்தாழ்வை குறைக்க வேண்டும், அரசியல் அழுத்தங்கள் மூலம் மாணவர்களை பாடசாலைக்குள் உள்வாங்கும் செயற்பாடு நிறுத்தப்பட வேண்டும்.

அரசியல் பின்புலம் அல்லது வேறு அழுத்தங்களின் மூலம் எக்காரணம் கொண்டும் கல்வித்துறைக்கு அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள்.

கல்வித்துறையின் தரத்திற்காக சரியான வேலைத்திட்டமொன்று தற்போது நடைமுறையில் உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


No comments