Header Ads

test

மஞ்சள் ஒரு கிலோ கிராமின் விலை 4500 - 5000 ரூபாய் வரை அதிகரிப்பு.

நாட்டில் அத்தியாவசிய பல பொருட்களின் விலைகள் மீண்டும் சந்தையில் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில்  கவ்பி, பயறு, உளுந்து மற்றும் மஞ்சள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளமையினால் விலைகள் அதிகரித்துள்ளன.

இந்தநிலையில்  மஞ்சள் ஒரு கிலோ கிராமின் விலை 4500 - 5000 ரூபாய் வரை அதிகரித்துள்ளதுடன் கவ்பி ஒரு கிலோ கிராம் 600 ரூபாய் வரையிலும், உளுந்து ஒரு கிலோ கிராம் 1600 ரூபாய் வரையிலும் அதிகரித்துள்ளது.

இது குறித்து அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன கூறுகையில் சந்தைக்கு அவசியமான அளவு உள்ளூர் உற்பத்திகள் இல்லாமையே இந்த அதிகரிப்பிற்கு காரணம் என  அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நடவடிக்கையினால் இந்த அத்தியவசிய பொருட்களை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.



No comments