மட்டக்களப்பில் 41 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று.
மட்டக்களப்பில் 41 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்தனர்.
கல்லடி கடற்படை முகாமில் முதலில் ஏழுபேரிடம் மேற்கொண்ட பீ சீஆர் பரிசோதனையில் மூவருக்கும் செவ்வாய்க்கிழமை 58 வீரர்களிடம் மேற்கொண்ட பீ சீஆர் பரிசோதனையில் 39 வீரர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார தரப்பிபினர் மேலும் தெரிவித்தனர்.
இதன் காரணமாக மாவட்டத்தில் பொலிசார் வங்கி உத்தியோகத்தர்கள் உட்பட பல தரப்பிலும் தொடர்ந்தும் அன்டிஜன் மற்றும் பீ சீஆர் பரிசோதனைகள் இடம் பெற்றுவருகின்றன.
Post a Comment