ஸ்ரீலங்காவிற்கு எதிராக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் முன்னகர்த்தப்படவுள்ள யோசனையில் 40 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
ஸ்ரீலங்காவிற்கு எதிராக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் முன்னகர்த்தப்படவுள்ள யோசனையில் 40 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
எனினும் இதில் 12 நாடுகளே பிரேரணையின் வாக்கெடுப்பில் வாக்களிக்கும் தகுதியைக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த யோசனையின் இறுதி வரைபு ஏற்கனவே இலங்கை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அதனை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. யோசனைக்கு ஆதரவளித்துள்ள நாடுகள் இணை அனுசரணையாளர்களாகவும் ஆதரவு நாடுகளாகவும் செயற்படவுள்ளன.
இந்தநிலையில் எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கைக்கு எதிரான யோசனை வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment