சீகிரியா பகுதியில் பிரதான வீதியில் நபரொருவரின் சடலம் இன்று(30) காலை சீகிரியா காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீகிரியா பகுதியில் பிரதான வீதியில் நபரொருவரின் சடலம் இன்று(30) காலை சீகிரியா காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கூரிய ஆயுதமொன்றை பயன்படுத்தி குறித்த நபரின் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.
இந்த கொலை தொடர்பாக விமானப் படை சிப்பாய் ஒருவர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கொலைக்காக பயன்படுத்திய ஆயுதத்துடன் இன்று காலை சீகிரியா காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
மெல்சிரிபுர பிரதேசத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
அவர் சிப்பாய்யின் மனைவியுடன் திருமணத்திற்கு அப்பாலான உறவினை பேணியுள்ளதாக விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.
இதனால் குறித்த சிப்பாய் தன் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சீகிரியா பிரதேசத்திற்கு இடம்பெயர்ந்துள்ளார்.
எனினும் கொலை செய்யப்பட்ட நபர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் அவரை கொலை செய்ததாக விமானப்படை சிப்பாய் மற்றும் அவரின் மனைவி காவல்துறையினருக்கு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் சீகிரியா காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Post a Comment