கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு செல்ல முயற்சித்த 24 பேர் கைது.
கற்பிட்டி - குரக்கன்ஹேன பகுதியிலிருந்து கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு செல்ல முயற்சித்த 24 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினர் இன்று முற்பகல் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, குறித்த பகுதியில் பாரவூர்தி ஒன்றில் இருந்த நிலையில் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சந்தேகநபர்கள், யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் மட்டக்களப்பு முதலான பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
அவர்களில் பெண் ஒருவரும், மூன்று சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment