Header Ads

test

239 பேருடன் மலேசியா விமானம் மாயம்.

 239 பேருடன் மலேசியா விமானம் MH370 மாயமானதில் அமெரிக்காவுக்கு தொடர்பு இருப்பதாக ஹொங்ஹொங்கைச் சேர்ந்த புலனாய்வு பத்திரிகையாளரான Florence de Changy தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

‘The Disappearing Act: The Impossible Case of MH3704’ என்ற தலைப்பில் Florence de Changy எழுதி வெளியிட்ட புத்தகத்தில், MH370 விமானம் சீனாவுக்கு முக்கியமான மின்னணு சாதனங்களை ஏற்றிச்சென்றது, அதை தடுக்க அமெரிக்க விமானப்படை முயன்றது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, விமானத்தின் கண்காணிப்பு தொழில்நுட்பத்தில் கோளாறு ஏற்படுத்தப்பட்டதால் அது ரேடாரிலிருந்து மாயமானது என கூறப்பட்டுள்ளது.

MH370-யின் பாதையை முடக்க இரண்டு அமெரிக்க விமானங்கள் முயற்சி மேற்கொண்டன.விமானத்தின் பாதையை மாற்றும் நடவடிக்கை தோல்வியில் முடிவடைந்ததால், MH370 சுட்டு வீழ்த்தப்பட்டது, அப்போதிருந்து இந்த விஷயம் மூடிமறைக்கப்பட்டுள்ளது.

வேறுவழியின்றி யோசிக்கமால் விமானத்தை சுட்டு வீழ்த்த முடிவெடுக்கப்பட்டிருக்கலாம், ஆனால், மின்னணு சாதனம் சீனா கையில் கிடைக்காமல் தடுப்பதற்கு, அமெரிக்காவுக்கு அது தான் கடைசி வாய்ப்பாக இருந்திருக்கும் என Florence de Changy புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.



No comments