Header Ads

test

தேரரின் காரை திருடிச் சென்ற 23 வயது இளைஞன் கைது.

 உடுதும்பர காசியப்ப தேரரின் காரை திருடிச் சென்ற 23 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை 07:15 மணியளவில் தலவத்தகொட பகுதியில் உள்ள இலங்கை வங்கிக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரே காணாமல் போயிருந்தது.

எனினும் கார் திருடப்பட்டு அரை மணி நேரத்திற்குள் பொலிஸார் காரைக் கண்டுபிடித்து சந்தேக நபரைக் கைது செய்தனர்.

இந்த கார் கிராமோதய மாவத்தை, கலல்கொட பகுதியில் இந்த கார் கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த காரில் பொருத்தப்பட்டு இருந்த ஜி.பி.எஸ் கருவியின் உதவியால் இந்த கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கார் கண்டுபிடிக்கப்படும் போது இலக்கத்தகடுகள் அகற்றப்பட்டு இருந்ததுடன், ஜி.பி.எஸ் டிராக்கரை அகற்ற முயற்சித்துள்ளார்.

மேலும் இந்த காரின் மதிப்பு 7 மில்லியன் ரூபாய் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.



No comments