Header Ads

test

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கிடையிலான மூன்றாவது 20க்கு 20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி.

 இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கிடையிலான மூன்றாவது 20க்கு 20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 3.30 அளவில் ஆரம்பமான இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

இதற்கமைய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்களை இழந்து 131 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதனையடுத்து, 131 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 19 ஓவர்களில், 7 விக்கட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை தனதாக்கிக் கொண்டது.


No comments