போதைப்பொருட்களை கடத்தல்காரர்களுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபர்கள் 20 பேரும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை மீள விளக்கமறியல் நீடிப்பு.
போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தினால் கைப்பற்றப்பட்டிருந்த போதைப்பொருட்களை கடத்தல்காரர்களுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபர்கள் 20 பேரும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் கொழும்பு பிரதம நீதிவான் புத்திக ஸ்ரீ ராகலவின் முன் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னரே விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் 15 அதிகாரிகளும் இதில் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment