Header Ads

test

முல்லைத்தீவு முள்ளியவளை கிச்சிராபுரத்தினை சேர்ந்த நபர் ஒருவருக்கு கொவிட் 19.

 முல்லைத்தீவு முள்ளியவளை கிச்சிராபுரத்தினை சேர்ந்த குடும்பஸ்தர் வேலைக்காக யாழ்ப்பாணம் சென்ற நிலையில் கொவிட் 19 ற்கு இலக்காகியுள்ளார்.

கடந்த புதன் கிழமை யாழ்ப்பாணத்தில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் பின்னர் கிச்சிராபுரத்தினை சேர்ந்த 40 அகவையுடைய குடும்பஸ்தர் முல்லைத்தீவில் உள்ள தனது வீட்டிற்கு சென்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இன்னிலையில் யாழ்ப்பாணத்தில் எழுமாற்றாக எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின் படி குறித்த நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கையில் சுகாததரபணிமனையினர் ஈடுபட்டுள்ள வேளை குறித்த நபர் முள்ளியவளை கிச்சிராபுரத்தில் தனிமையில் இருந்த நிலையில் 26.03.21 அன்று முகவரி அறிந்த சுகாதாரபிரிவினர் அவரை கிளிநொச்சியில் உள்ள கொரோனா மருத்துவமனைக்கு அழைத்துசென்றுள்ளார்கள்.


No comments