17 மோட்டார் சைக்கிள்களை திருடிய முதியவர்.
நாடு முழுவதும் உந்துருளிகளை திருடும் செயற்பாட்டில் ஈடுபட்டு வந்த வயோதிபர் ஒருவர் பொலன்னறுவை - அரலங்வில பிரதேசத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சந்தேக நபரினால் திருடப்பட்ட 17 உந்துருளிகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்ட வயோதிபர் 78 வயதான ஒருவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நபர் நீண்ட காலமாக இவ்வாறு உந்துருளி திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment