16 ஆம் திகதி தலை மன்னாரில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் உயிரிழந்த மாணவனின் மரணத்திற்கு நீதி கோரி இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தலை மன்னார் - பியர் பகுதியில் உள்ள தொடருந்து கடவையில் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற தொடருந்து விபத்தில் உயிரிழந்த மாணவனின் மரணத்திற்கு நீதி கோரி இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்று காலை 7.45 அளவில் தலைமன்னார் பியர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு முன்பாக இந்த போராட்டம் ஆரம்பமாகியது.பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சர்வமத தலைவர்கள் உள்ளிட்டோர் இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
பின்னர் அங்கிருந்து பேரணியாக சென்று விபத்து இடம்பெற்ற தொடருந்து கடவைக்கு அருகில் தங்களது எதிர்ப்பினை வெளியிட்டனர்.
தொடருந்து பாதுகாப்பு சமிஞ்சை கட்டமைப்பு திருத்தப்பட வேண்டும், அதற்காக புதிய அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தவர்கள் வலியுறுத்தியதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
தலைமன்னார் - பியர் பகுதியில் உள்ள தொடருந்து கடவையில் கடந்த 16 ஆம் திகதி தனியார் பேரூந்தும், தொடருந்தும் மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த சம்பவத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்ததுடன், 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment