Header Ads

test

பம்பரகந்தை நீர்வீழ்ச்சியினை பார்வையிட சென்று காணாமல் போயிருந்த 11 பேர் இன்று மீட்பு.

 பம்பரகந்தை நீர்வீழ்ச்சியினை பார்வையிட சென்று காணாமல் போயிருந்த 11 பேர் கொண்ட குழுவினர் இன்று (28) பிற்பகல் காவல்துறையினால் மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் கல்கிசை பகுதியை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

பனி மற்றும் நீர்வீழ்ச்சியின் தாரல் அதிகரித்தமையால் அவர்கள் மீண்டும் கீழ் இறங்க முடியாத நிலை ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து குறித்த குழுவினர் கொழும்பு அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு தகவல் வழங்கியிருந்தனர்.

அதன்பின்னர் உடனடியாக பம்பரகந்தை பகுதிக்கு சென்ற ஹல்துமுல்லை காவல்துறையினர் அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments