Header Ads

test

பசறை 10ம் கட்டையில் பாரவூர்தியொன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகி உள்ளது.

 பசறை 10ம் கட்டை பிரதேசத்தில் நேற்று மாலை பாரவூர்தியொன்று பாதையை விட்டு விலகி சிறு கால்வாய் ஒன்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

பசறையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளையிலேயே குறித்த பாரவூர்தி பிரதான வீதியிலிருந்து 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இவ்விபத்தில் பாரவூர்தியில் பயணம் செய்த இருவர் காயமடைந்த நிலையில் பசறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பில் பசறை காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


No comments