Header Ads

test

ஓட்டமாவடியில் அடையாளம் காணப்பட்ட காணியில், நேற்று (07) வரைக்கும் 24 சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளன.

 கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டதன் பின்னர், ஓட்டமாவடியில் அடையாளம் காணப்பட்ட காணியில், நேற்று (07) வரைக்கும் 24 சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணமடைவோரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கான அனுமதி வெள்ளிக்கிழமை முதல் வழங்கப்பட்டது.

சடலங்கள் அடக்கம் செய்யும் காணியில் இராணுவ காவலரண் நிறுவப்பட்டுள்ளது. அடக்கம் செய்வதற்காக எடுத்துவரும் சடலங்களுடன், அவர்களின் நெருங்கிய உறவினர்கள் இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்பதுடன், சுகாதார பணிப்பாளர் நாயகத்தால் வெளியிடப்பட்ட சுகாதார வழிமுறைகள் அப்படியே கடைப்பிடிக்கவேண்டுமென ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட வைத்தியசாலைகளில் மட்டும் சுமார் 10 சடங்கள், பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

அவற்றை அடக்கம் செய்யவேண்டுமென உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



No comments