Header Ads

test
வரலாற்றுச் சாதனை படைத்தது விக்கினேஸ்வர மகா வித்தியாலயம்.!!!

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையில் பொலன்னறுவை றோயல் கல்லூரியில் நேற்றைய தினம் இடம்பெற்ற “பளு தூக்கல்” போட்டியில் யா/ மீசாலை விக்கினேஸ்வர மகா வித்தியாலய மாணவி செல்வி ஜெந்திரன் யாதவி தங்க பதக்கம் வென்றுள்ளார்.

17 வயதின் கீழ் பிரிவு பெண்களுக்கான 45 கிலோ எடைப் பிரிவில்          போட்டியிட்ட செல்வி ஜெந்திரன் யாதவி 82 கிலோ எடையை தூக்கி சாதனை படைத்துள்ளார்.

யா /மீசாலை விக்கினேஸ்வர மகா வித்தியாலய மாணவர் ஒருவர் தேசிய மட்ட போட்டி ஒன்றில் தங்கம் வென்றமை இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.






No comments