ஆனையிறவில் பாரிய விபத்து - சம்பவத்தில் ஒருவர் பலி.!!!

கிளிநொச்சி ஏ9 வீதி ஆனையிறவு பகுதியில் இன்று (02) அதிகாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ள நிலையில் இருவர் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்தானது இன்று அதிகாலை மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது.
யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த இரண்டு லொறிகளுடன் கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த ஹயஸ் ரக வாகனமே மோதி இவ் விபத்து நேர்ந்துள்ளது.
இவ் விபத்தில் ஹயஸ் வாகன சாரதி ஸ்தலத்தில் பலியாகியுள்ளதோடு, லொறி சாரதி மற்றும் ஹயஸ் வாகனத்தில் பயணி்த்த நபர் ஒருவரும் காயமடைந்துள்ள நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment