யாழில் புதிதாக முளைத்த செந்தழுபுரம்.!!!
யாழில் புதிதாக முளைத்த செந்தழுபுரம்.!!!
மாவிட்டபுரம், கீரிமலை வீதியில், கீரிமலை சந்தியிலிருந்து 500 மீற்றர் தூரத்தில் செந்தழுபுரம் மாதிரிக் கிராமம் என்ற பெயரில் நேற்றைய தினம் இரவு சீமெந்தினால் உருவாக்கப்பட்ட பெயர் பலகை ஒன்று நாட்டப்பட்டுள்ளது.
ஆள் நடமாட்டம் குறைவடைந்த நேரத்தில் இருவர் இப் பெயர் பலகையை நாட்டி விட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடம் முன்னாள் இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்கவினால் குறித்த பதாகையில் காட்டப்பட்டுள்ள பிரதேசத்தில் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், இப் பெயர் பலகை நேற்று நாட்டப்பட்டுள்ளது.
செந்தழு என்பது தமிழில் புதியதுளிர் அல்லது இளந்துளிர் என்கின்ற கருத்துப்பட அக் கிராமத்துக்குப் பெயர் இடப்பட்டுள்ளது.
வீதிகளுக்கும் மற்றும் கிராமங்களுக்கும் பெயர்கள் சூட்டி பலகைகள் நாட்டப்படுவதானால் குறித்த பிரதேசத்தின் உள்ளுராட்சி சபையிடம் அனுமதிகள் பெறப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment