Header Ads

test

அட்டன் பகுதியில் தீ விபத்து - கடை எரிந்து நாசம்.!!!

அட்டன் பகுதியில் தீ விபத்து -  கடை எரிந்து நாசம்.!!!

அட்டன் நகர டன்பார் வீதியில் அமைந்துள்ள புடைவை விற்பனை நிலையமொன்றில் ஏற்பட்ட திடீர் தீயினால் கடை பகுதியளவில் எரிந்து நாசமாகியுள்ளது.

இச் சம்பவம் நேற்று  (03) இரவு 10 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

குறித்த தீவிபத்தில் ஒருவர் காயங்களுக்குள்ளாகி டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், விற்பனை நிலையத்தில் இருந்த புடைவைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தீ பரவுவதை கேள்வியுற்று ஸ்தலத்திற்கு விரைந்த அட்டன் நகர சபை தீயணைப்புப் படையினர் மற்றும் பொலிஸார், பிரதேசவாசிகள் இணைந்து தீயினை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இதனால் தீ ஏனைய வர்த்தக நிலையங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது.

உரிமையாளர் வியாபார நிலையத்தினை பூட்டிவிட்டுச் சென்றுள்ள நிலையிலேயே இந்த தீ விபத்து ஏற்படடுள்ளதாகவும், விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் கண்டறியப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் அட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




No comments