Header Ads

test

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக தனிபர் ஒருவர் போராட்டம்.!!!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக தனிபர் ஒருவர் போராட்டம்.!!!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் தன்னிச்சையாக செயற்படுவதாக தெரிவித்து வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று (03) காலை தொடக்கம் மதவுவைத்தகுளம் சனசமூக நிலையத்தின் உபதலைவர் மாணிக்கம் சிவச்சந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவது -
மதவுவைத்தகுளம் பகுதியிலுள்ள  மக்களுக்கு பல வருடகாலமாக நீர் விநியோகம் மேற்கொண்டு வருவதாகவும்  வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் என் மீது பொய்யான குற்றச் சாட்டுக்களை தன் மீது  சுமத்தி தன்னை நீர்விநியோக பணியிலிருந்து நீக்கி வேறோரு நபருக்கு நீர்விநியோக பணியினை வழங்கியுள்ளதாகவும் குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

இச் செயற்பாடானது தவிசாளரின் தன்னிச்சனையான முடிவென்றும் இவ் குறித்த அநீதிக்கு நீதி கிடைக்க வேண்டுமெனவும் தெரிவித்தே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

"தெற்கு பிரதேச சபை தவிசாளருக்கு எதிரான போராட்டம் எனக்கு நீதி வேண்டும்" என்று எழுதப்பட்டுள்ள பதாதையினை ஏந்தியவாறே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம் அவர்களை தொடர்பு கொண்டு வினவிய போது,கடந்த ஜந்து நாட்களாக பொது மக்களுக்கு நீர் வழங்கல் செய்யாது  நீர் விநியோக கட்டிடத்தின் திறப்பினை குறித்த நபர் வவுனியா தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை காரியாலயத்தில் ஒப்படைத்துள்ளது.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் -
மதவுவைத்தகுளம் பகுதியில் அமைந்துள்ள நீர்வழங்கல் திட்டம் எமது பிரதேச சபைக்கு சொந்தமானது, எனவே தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையிடம் திறப்பினை பெற்று பிரிதொரு நபரிடம் வழங்கி, மக்களுக்கான நீர் விநியோகத்தினை மேற்கொண்டுள்ளதாகவும்  தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


No comments