Header Ads

test

வவுனியா வைரவப்புளியங்குளத்தில் விபத்தை ஏற்படுத்திய நபர் தப்பியோட்டம்.!!!

வவுனியா வைரவப்புளியங்குளத்தில் விபத்தை ஏற்படுத்திய நபர் தப்பியோட்டம்.!!!

வவுனியா வைரவப்புளியங்குளம், புகையிரத நிலைய வீதியில் இன்று (05) மாலை 5.25 மணியளவில் இடம்பெற்ற உந்துருளி மற்றும் துவிச்சக்கரவண்டி  ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது -
வைரவப்புளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்திற்கு அருகேயிருந்து பாதையின் மறுபக்கம் செல்ல  முற்பட்ட துவிச்சக்கரவண்டியினை குருமன்காட்டு சந்தியிலிருந்து புகையிரத நிலைய வீதியுடாக பயணித்த உந்துருளியே இவ்வாறு துவிச்சக்கரவண்டியை  மோதித்தள்ளியுள்ளது.

குறித்த விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த 42 வயது மதிக்கத்தக்க பெண் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்  விபத்தினை ஏற்படுத்திய உந்துருளியின் சாரதி சம்பவ  இடத்திலிருந்து தப்பித்து சென்றுள்ளார்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



No comments