Header Ads

test

மன்னார் பேசாலை பிரதேச வைத்தியசாலையில் இரத்த மாதிரி பரிசோதனை பிரிவு திறந்துவைக்கப்பட்டுள்ளது.!!!

மன்னார் பேசாலை பிரதேச வைத்தியசாலையில் இரத்த மாதிரி பரிசோதனை பிரிவு திறந்துவைக்கப்பட்டுள்ளது.!!!

மன்னார் பேசாலை பிரதேச வைத்தியசாலையில் பல வருடங்களின் பின் இன்று (02) காலை இரத்த மாதிரி பரிசோதனை பிரிவு வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு தொடர்பில் தெரியவருவதாவது -

சுமார் 10 கிராமங்களை உள்ளடக்கி வைத்திய சேவையை வழங்கி வரும் பேசாலை பிரதேச வைத்தியசாலையில் நீண்ட காலமாக இரத்த பரிசோதனை பிரிவு இல்லாத நிலை காணப்பட்டது.

குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் இரத்த பரிசோதனைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சென்று வந்துள்ளனர்.

இதன் காரணமாக மக்கள் பாரியளவிலான அசொளகரியங்களை சந்தித்து வந்துள்ள நிலையில் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் பணிப்புரைக்கு அமைவாக பேசாலை பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி இ.ஈட்டன் பீரிஸ் அவர்களினால் வைபவ ரீதியாக இரத்த மாதிரி பரிசோதனை பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.



No comments