Header Ads

test

சஜித் பிரேமதாச தெரிவுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல்குழு அதிகாரபூர்வமாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.!!!

சஜித் பிரேமதாச தெரிவுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல்குழு அதிகாரபூர்வமாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.!!!

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசவின் தெரிவுக்கு, இன்று காலை கொழும்பில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சு கேட்போர் கூடத்தில் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் கூடிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு ஏகமனதாக அங்கீகாரத்தை வழங்கிள்ளது.

மேலும், தேர்தல் விஞ்ஞாபனத்தில் இடம்பெற வேண்டிய விவகாரங்கள் தொடர்பிலும், சஜித் பிரேமதாசவுடன் ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய உடன்பாடுகள் தொடர்பிலும் ஆராய்ந்து தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வி. ராதாகிருஷ்ணன், பா.உ வேலு குமார், அரவிந்த குமார் மற்றும் பொது செயலாளர் சந்திரா சாப்டர் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

No comments