Header Ads

test

பரிதாபகரமாக விபத்தில் மரணமடைந்த யாழ்.இளைஞன்.!!!

பரிதாபகரமாக விபத்தில் மரணமடைந்த யாழ்.இளைஞன்.!!!

யாழ்ப்பாணம் மல்லாகம், கே.கே.எஸ். வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் 19 வயது இளைஞன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.நேற்று (04) மாலை 6.30 மணியளவில் பாரவூர்தியும் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதிலேயே இவ் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்துச் சம்பவத்தில் அளவெட்டி வடக்கைச் சேர்ந்த சௌந்தரராஜன் விதுஷன் (வயது-19) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞன் தலையில் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments