வவுனியாவில் வேலை பெற்று தருவதாக நபர் ஒருவர் மோசடி - பொலிஸார் வலை வீச்சு.!!!

வவுனியாவில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாகவும் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பவதாகவும் தெரிவித்து பலரிடம் பண மோசடி செய்த நபரை பொலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் -
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த ரத்தினம் சுரேஷ் குமார் என்ற 50 வயதுடைய ஒருவரே இவ்வாறான மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
வெளிநாட்டிற்கு அனுப்புவதாகத் தெரிவித்து 5 இலட்சத்திற்கும் அதிகமான பணங்களை பெற்றுள்ளதாகவும் அதில் சிலர் தமது பணத்தைத் மீள கேட்டுள்ளனர்.
எனினும் அவரின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்ட போதும் அவரின் தொலைபேசி இயங்கவில்லை என்று பாதிக்கப்பட்டோர் தெரிவித்தனர்.
இதையடுத்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இவர் தொடர்பாக தகவல் அறிந்தால் வவுனியா பொலிசாரிடம் அறிவிக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
"இதைப்போன்ற இன்னும் சில மோசடிக்காரர்களின் விடயங்கள் வெகுவிரைவில் அம்பலப்படுத்தப்படும்."

Post a Comment