Header Ads

test

01.11.2019 இன்றைய நாள் எப்படி.!!!

01.11.2019 இன்றைய நாள் எப்படி.!!!

மேஷம்:
இன்று குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். எல்லோராலும் பாராட்டப்படும் வகையில் நடந்து கொள்வீர்கள். வரவை போலவே செலவும் இருக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் கைகூடும். பகை விலகும். எதிர்ப்புகள் அகலும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

ரிஷபம்:
இன்று நம்பிக்கையுடன் காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. புத்தி சாதூரியத்துடன் காரியங்களை செய்து மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரலாம். எதிர்ப்புகள் விலகும். எந்த காரியம் செய்தாலும் தாமதம் உண்டாகும்.தொழிலில் திட்டமிட்டு செயலாற்றுவதில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். குடும்பத்தில் திருமணம் விஷயமாக நாடி வந்த சம்பந்தம் கைகூடி சுபநிகழ்ச்சிகள் மிகவும் ஆராவராமாக நடந்தேறும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். விளையாட்டுகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மிதுனம்:
இன்று எல்லாவற்றிலும் ஒரு பயம் ஏற்படும். புதியநபர்களின் நட்பு உண்டாகும். வீடு வாகனம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மெத்தனமான போக்கு காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்களை திட்டமிட்டபடி மேற்கொள்ள முடியாத நிலை உண்டாகும்.மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் கவனமுடனும் ஆசிரியர்களின் உதவியுடனும் பாடங்களை படிப்பது நல்லது. நீங்கள் அடுத்தவர்களுக்கு செய்யும் நற்காரியங்களுக்கு நிறைய ஆதரவுகள் கிடைக்கப்பெருவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

கடகம்:
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகளால் டென்ஷன் உண்டாகலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதி குறைவு உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். பெண்களுக்கு உங்களது காரியங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும். மனகுழப்பம் நீங்கும். மாணவர்களுக்கு பாடங்கள் படிக்க வேண்டுமே என்ற கவலைகுறையும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

சிம்மம்:
இன்று வாக்குவாதங்கள் மற்றும் அடுத்தவர் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. பணவரத்து கூடும். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். மனகவலை நீங்கும் படியான சூழ்நிலை இருக்கும். உற்சாகம் உண்டாகும். பயணத்தின் போது ஏற்பட்ட தடங்கல் நீங்கும்.கலைத்துறையினருக்கு உடல்நிலையில் இருந்துவந்த சிரமங்கள் முற்றிலும் நீங்கும். மேல் அதிகாரிகள் தங்களுக்கு ஆதாரவாக இருப்பார்கள்.அரசியல் துறையினருக்கு சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் சக மாணவர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கன்னி:
இன்று தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். போட்டிகள் விலகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.சொல்லாற்றல் மிக்க நீங்கள் காரியங்களை சாதிக்கும் ஆற்றலும் மிக்கவராக இருப்பீர்கள். சாமர்த்தியமாக பேசி காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். நினைத்தபடி பணவரவுகளைப் பெறலாம். லாபத்தையும் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

துலாம்:
இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். எதிர்பாராத பணவரத்து இருக்கும். மனக்கவலை நீங்கி உற்சாகம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.பார்வை பலனால் நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நன்மையாக இருக்கும். கூர்மையான மதி நுட்பத்தால் எந்த பிரச்சனையையும் எளிதாக தீர்த்து விடுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த தகராறுகள் நல்லமுடிவுக்கு வரும்.புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு சாதகமான பலன்தரும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

விருச்சிகம்:
இன்று தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப பிரச்சனை தீரும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. ஏதேனும் மனகஷ்டம் உண்டாகும். வீண்செலவு ஏற்படும். உடல் சோர்வு வரலாம். மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும்.தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். பார்ட்னர்கள் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய முற்படுவீர்கள். ஏற்றுமதி சம்பந்தமான துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த வேலையை எப்பாடுபட்டாவது செய்து விடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

தனுசு:
இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமடைய பாடுபடுவீர்கள். எதிர்பார்த்த ஆர்டர்கள் வரலாம். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமித்தமாக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதிருப்தியை தரும். உறவினர் நண்பர்களிடம் நற்பெயர் எடுப்பீர்கள் .பெண்களுக்கு உங்களது ஆலோசனை கேட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் செயல்படுவார்கள். ஆன்மீக நாட்டம் உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மகரம்:
இன்று குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழ்நிலை வரலாம். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது அவர்களின் வெற்றிக்கு உதவும்.அரசியல் துறையினருக்கு எடுக்கக் கூடிய ஒப்பந்தகளை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். லாபம் பெருகும். மேலிடத்தின் கனிவான பார்வை கிடைக்கப் பெறுவீர்கள்.மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வியில் ஆர்வம் உண்டாகும். புதிய வகுப்புகளில் சேர முயற்சிகள் மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

கும்பம்:
இன்று கடின உழைப்பை கண்டு அஞ்சாத நீங்கள் உதவிக்கரம் நீட்டுவதில் ஆர்வம் மிக்கவர். சுபகாரியங்களில் கலந்து கொள்ள நேரலாம். பணம் வரவு நன்றாக இருக்கும. இழுபறியாக இருந்தவை சாதகமாக முடியக்கூடும். தேவையற்ற கவலைகள் நீங்கும். மனோ தைரியம் கூடினாலும் பழைய சம்பவங்களின் நினைவால் மனமகிழ்ச்சி குறையும். பணவரத்து இருக்கும். மனகவலை நீங்கும். எடுத்த காரியத்தை திருப்தியுடன் செய்து முடிப்பீர்கள். சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான நேரங்களில் கைகொடுக்கும்.கலைத்துறையினருக்கு நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வருவாய் உண்டு. சோதனைகள் வெற்றியாக மாறும். உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களைக் கவரும். உல்லாசப் பயணங்களில் நாட்டம் செல்லும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

மீனம்:
இன்று புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் தடையின்றி நடக்கும். புதிய ஆர்டர் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து மன நிம்மதி அடைவார்கள்.கலைத்துறையினருக்கு பொறுமையுடன் செயல்பட வேண்டும். வியாபாரத்துறைகளில் மறைமுக போட்டிகளால் நெருக்கடிகளைச் சந்திக்கலாம். கவனமாகச் செயல்பட்டால் லாபம் பெறலாம். அயல்நாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

No comments