Header Ads

test

யமனாக மாறிய உந்துருளி - சம்பவத்தில் இளைஞன் உயிரிழப்பு.!!!

யமனாக மாறிய உந்துருளி  - சம்பவத்தில் இளைஞன் உயிரிழப்பு.!!!

வவுனியா, ஓமந்தை மாதர் பனிக்கர் மகிளங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாலமோட்டையைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இறம்பைக்குளத்திலிருந்து உந்துருளியில் குறித்த இளைஞன் தனது வீட்டுக்கு சென்றபோதே இவ் விபத்து நிகழ்ந்துள்ளது.

இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவது -

அதிக வேகமாக சென்றதான் காரணத்தால் கட்டுப்பாட்டை இழந்த உந்துருளி மதகுடன் மோதியே இவ் விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக  விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments