Header Ads

test

அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் அவர்களின் அதிரடி - வவுனியாவில் பல்வேறுபட்ட அபிவிருத்தி வேலைகள்.!!!

அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் அவர்களின் அதிரடி - வவுனியாவில் பல்வேறுபட்ட அபிவிருத்தி வேலைகள்.!!!

கெளரவ அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் அவர்களின் நிதி ஒதுக்கீடு மூலம் வவுனியா மாவட்டத்தில் பரவலாக அபிவிருத்தி வேலைகள் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ்  சுந்தரபுரம் சரஸ்வதி வித்தயாலயத்திற்க்கான  நிரந்தரமான நுழைவாயில் அமைப்பதற்க்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்று (11) நடைபெற்றது.

இந் நிகழ்வானது  பாடசாலையின்  அதிபர் திருமதி.ஜெயமனோகரி தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் அவர்களின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி முத்து முகமது, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜெயதிலக்க, நகரசபை உறுப்பினர்களான ARM லறீப், MS அப்துல் பாரி மற்றும்  முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஜோர்ஜ் இவர்களுடன் ஆசிரியர்கள் மாணவர்கள்  என பலரும்  கலந்து




 கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments