Header Ads

test

தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஞானசார தேரரை சிறையிலிருந்து ஜனாதிபதி விடுவித்தமையே நீராவியடிச் சம்பவத்துக்கு காரணம் - நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்.!!!

தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஞானசார தேரரை சிறையிலிருந்து ஜனாதிபதி விடுவித்தமையே நீராவியடிச் சம்பவத்துக்கு காரணம் - நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்.!!!

நேற்றைய (23) தினம் முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய தீர்த்தக்கேணிப் பகுதியில் நீதி மன்ற உத்தரவையும் தாண்டி  ஞானசாரதேரர் தலமையில் இறந்த பிக்குவின் உடலம் தகனம் செய்யப்பட்டமை மனவேதனைக்குரிய சம்பவம் என  நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கருத்து தெரிவிக்கையில் - 

ஜனாதிபதியால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறை வைக்கப்பட்டிருந்த ஞானசார தேரரை தனது அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்தமையின் விளைவேயே நீராவியடிச் சம்பவம் காட்டி நிற்கின்றது.

இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் குரோதங்களை ஏற்படுத்தி இன நல்லிணக்கத்தை விளைவித்து வருகின்றார் ஞானசார தேரர்.

இந் நாட்டில் சட்டம் சரியான முறையில்  நடைமுறைப்படுத்தப்பட்டால் ஞானசார தேரர்
விசாரணைக்காக  செய்து கைதுசெய்யப்பட வேண்டும்.

மேலும் கூறுகையில் - நாட்டில் நீதி என்பது யாவரிக்கும் ஒரே தன்மையானதாக காணப்பட்டால் ஞானசாரதேரரை உடனடியாக விசாரணைக்குட்படுத்தி  சிறையில் அடைக்க வேண்டும், தவறும் பட்சத்தில் இதே போன்ற இன நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பார் என்பது நிதர்சனமாகும்.

சிறுபாண்மை இனத்தவர்கள் மீது கரிசனைகொண்டு செயற்பட்ட பாலித்த தேவப்பெரும நீதி மன்றத்தை அவமதித்தார் எனும் குற்றச்சாட்டின் கீழே கைது செய்ப்பட்டுள்ளார்.

இலங்கையில் சட்டம் ஒழுங்கு சீரற்று காணப்படுவதன் தோற்றப்பாடே தேவப்பெருமவிற்கும் ஞானசார தேரருக்கும் வெவ்வாறான நீதி வழங்கப்பட்டுள்ளமை.

இது மட்டுமல்லாது நீதிமன்ற உத்தரவினை மீறி செயற்பட்டபோது அநீதிக்கு துணை போகின்ற விதத்தில் பொலிஸார் செயற்பட்டமையை நோக்கும் போது இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு எப்படிப் பாதுகாப்பது என்ற கேள்வி எழுகின்றது.

இவரது இவ்வாறான அநாகரீகமான செயற்பாட்டுக்கு வடகிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்களும் துணை போவது கவலைக்குரிய விடயமாகும் என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments