Header Ads

test

ஞானசார தேரரை கல்லில் கட்டி கடலில் போடுங்கள் - வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் சீற்றம்.!!!

ஞானசார தேரரை கல்லில் கட்டி கடலில் போடுங்கள் - வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் சீற்றம்.!!!

இனங்களுக்கு இடையில் காணப்படும் நல்லினக்கத்திற்கு எதிராக செயற்படுகின்ற  ஞானசார தேரரை கல்லில் கட்டி கடலில் போடுங்கள் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன்
சமாதனத்தை விரும்பும் சிங்களவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந் நாட்டில் பௌத்த மதத் துறவிகளுக்கு என  தனிச் சட்டங்கள் எவையேனும்  இயற்றப்பட்டுள்ளதா.

நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் நிகழ்த்தப்பட்ட வன்முறைச் சம்பவங்களில் ஈடுப்பட்ட   ஞானசார  தேரர் உட்படவர்களை ஏன் கைது செய்யவில்லை.

ஞானசார தேரர் கூறும் இலங்கையில்  சிங்கள பௌத்த கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. இக் கொள்கையினை  தெற்கு மக்கள் ஏற்றுக் கொள்வார்களே தவிர  வடக்கு கிழக்கு மக்கள் ஒருபோதும்  ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

இதைப் போன்றே அண்மையில், வவுனியா கல்குனா மடுவில் புத்த விகாரைக்குட்பட்ட பகுதியில் விநாயகர் ஆலயம் அமைப்பதற்கென  எனது நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்பட்டது.
அவர்கள் பௌத்தர்களா? அல்லது ஞானசார தேரர் பௌத்தரா? அதனால் தான் கூறுகின்றேன். இலங்கையில் இனங்களுக்கிடையில் காணப்படும் முரண்பாடுகளை தீர்க்க வேண்டுமாக இருந்தால் விரைந்து ஞானசார தேரரை கல்லில் கட்டி கடலில் போடுங்கள் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன்  சீற்றம் கொண்டுள்ளார்.

No comments