தென்மராட்சி பகுதியில் தொடரும் வாள் வெட்டுக்குழுவினரின் கைவரிசை - அச்சத்தில் மக்கள்.!!!

யாழ்.தென்மராட்சி பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் வாள் வெட்டுக் குழுவினர் அட்டகாசம் புரிந்துள்ளதோடு,சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்துள்ளனர்.
இரண்டு உத்துருளிகளில் சாவகச்சேரி நகருக்குள் வருகைதந்த வாள் வெட்டுக்குழுவினர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த "பட்டா"வாகானத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது -
இச் சம்பவமானது நேற்று முன்தினமிரவு (03) 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த வாள்வெட்டுக் குழுவினர் தொடர்ந்து சாவகச்சேரி ஏ9 வீதியில் உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞன் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதோடு, அவரது உந்துருளியும் சேதமாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தாக்குதல்களை மேற்க்கொண்ட நபர்கள் மீசாலை பகுதியில் வீதியால் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டிமீது தமது கைவரிசையை காட்டியுள்ளனர்.
மேலும் இவ் வாள்வெட்டு குழுவினர் புத்தூர் பகுதியிலும் தமது தாக்குதலை நடாத்த தவறவில்லை.வீதியால் பயணித்த டிப்பர் வாகனத்தின் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறான சம்பவம் ஒரே நாளில் மக்கள் நெரிசாலன பகுதியில் இடம்பெற்றதால் குறித்த பகுதியில் பதட்டம் நிலவியது.இச் சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment