Header Ads

test

யாழ்.மீசாலையில் சொகுசு பேருந்துடன் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.!!!

யாழ்.மீசாலையில் சொகுசு பேருந்துடன் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.!!!


சாவகச்சேரி மீசாலை ஏ - 9 பிரதான வீதியில் இன்று (06) இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது -

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேருந்தும்  உந்துருளியும் ஒன்றுடன்  ஒன்று மோதியே இவ் விபத்து நிகழ்ந்துள்ளது.

இச் சம்பவத்தில் பளை வேம்படுகேணியைச் சேர்ந்த 28 வயதுடைய சுப்பிரமணியம் ரஜீதரன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

சடலம் சாவகச்சேரி  ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.





No comments