Header Ads

test

வவுனியா வைரவபுளியங்குளத்தில் விபத்து - ஒருவர் படுகாயம்.!!!

வவுனியா வைரவபுளியங்குளத்தில் விபத்து -  ஒருவர் படுகாயம்.!!!

வவுனியா வைரவபுளியங்குளத்தில் இன்று (09) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இவ்விபத்து தொடர்பாக தெரியவருகையில்

வவுனியாவிலிருந்து திருநாவற்குளம் நோக்கி சென்ற உந்துருளி  வீதிக்கு ஏற முற்பட்ட முச்சக்கர வண்டியுடன் மோதியதிலேயே இவ் விபத்து நிகழ்ந்துள்ளது.

இவ் விபத்தில்  உந்துருளி சைக்கிளில் பயணித்த த.பிரகலாதன் வயது 45 என்ற குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில்  வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை  குறிப்பிடத்தக்கது.


No comments