Header Ads

test

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் முல்லைத்தீவில் மக்கள் சந்திப்பு.!!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின்  முக்கியஸ்தர்கள் முல்லைத்தீவில்  மக்கள் சந்திப்பு.!!!

இன்றைய தினம் (29) முல்லைத்தீவு குமுழமுனைப் பகுதியில் பொதுமக்களுடனான  சந்திப்பொன்றினை  தமிழ் தேசிய கூட்டமைப்பின்  முக்கியஸ்தர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

குறித்த சந்திப்பில்  யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான  மாவை சேனாதிராசா,மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உட்பட்ட குழுவினர் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கருத்தாய்வு ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

இச் சந்திப்பில் குறித்த பகுதியில் காணப்படும் காணி அபகரிப்புகள், சட்டவிரோத மற்றும் வெளிமாவட்ட மீனவர்களின் அத்து மீறிய செயற்பாடுகள் போன்றன கலந்துரையாடப்பட்டது.

இக் கலந்துரையாடலில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சாந்தி சிறீஸ்கந்தராசா, சி.சிவமோகன் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன்,ப.சத்தியலிங்கம் மற்றும்
பிரதேசத்தின் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்மை குறிப்பிடத்தக்கது.




No comments