Header Ads

test

கழுத்தை அறுத்து தற்க்கொலைக்கு முயற்ச்சி - யாழில் சம்பவம்.!!!

கழுத்தை அறுத்து தற்க்கொலைக்கு முயற்ச்சி - யாழில் சம்பவம்.!!!

போதைப்பொருள் உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர், கழுத்தை பிளேட்டால் வெட்டி தற்க்கொலைக்கு முயற்ச்சித்த சம்பவம் யாழ்பாணம் நீதவான் நீதி மன்றத்துக்குட்பட்ட விளக்க மறியல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (12) இடம்பெற்றுள்ளது.

2 கிராம் 400 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட நபர்  கடந்த யூலை மாதத்தில் இருந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில் திடீரென  தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதன் விளைவாக,சிகிச்சைக்காக  யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments